என் மூன்றாம் தலைமுறை தாண்டியும் தொடர்கிறது
நான் யார் எனச் சொல்ல
நிரூபணங்கள் அதிகம் கைவசம் உள்ளன
தெய்வத்தின் பெயரா; எதையும் பின் தொடரலாம்
தத்துவத்தின் நடுவில் வேறு ஒருவர் அதை கண்டுபிடிக்கலாம்
இரகசியமாய் குசுகுசுக்கலாம்
எல்லாம் தெரிந்த நண்பனும் உண்டு
இப்படித்தான் இவர் என பெண்டிர் முடிவு
தப்பிப்பது எக்காலம்
கடந்த முறை வந்த பூனை
என்னை உற்றுப் பார்க்கிறது
அதே பூனைதானா என நானும்
அவனோதானா எனப் பூனையும்
மீச்சிறு கணத்திலிருந்தோம்
காம்யுவின் துப்பாக்கியைத் தேடினேன்
மிகச்சிறந்த கேள்வி சன்னல் வழி
பதற்றத்துடன் தப்பி ஓடிவிட்டது

Comments are closed.