அன்பின் அதிகாலை
எலுமிச்சை நிறத்தில் இருந்தபோது
உனது நடத்தை
தானியம் விதைக்கப்போவதுபோல் இருந்தது
உனது பேச்சொலி
வேளாண் நிலத்தில்
களைக் கொல்லியாய்
மீண்டும் அறுவடைக்கான முகாந்திரங்களில்
துல்லியமடையும்போது
எனது நிலத்தை அதன் புழுதியுடன் விரிக்கிறேன்
உனது நடனம்
அச்சமயம் அத்திக்காயின் வண்ணத்தில்
எனது காமம்
பிறகு எனது செய்கை
பிரியங்களின்மேல் தன்னிச்சையாவும்
அடிப்படைகளின் மேல்
கூடுதலுக்கு என துல்லியமடையும்போது
நீ தவறவிட்ட அல்லது விதைத்தவை
அறுவடைக்குத் தயாராகிவிடுகின்றன
மாலையோ இளம் பொன்நிறத்திற்கு.
எலுமிச்சை நிறத்தில் இருந்தபோது
உனது நடத்தை
தானியம் விதைக்கப்போவதுபோல் இருந்தது
உனது பேச்சொலி
வேளாண் நிலத்தில்
களைக் கொல்லியாய்
மீண்டும் அறுவடைக்கான முகாந்திரங்களில்
துல்லியமடையும்போது
எனது நிலத்தை அதன் புழுதியுடன் விரிக்கிறேன்
உனது நடனம்
அச்சமயம் அத்திக்காயின் வண்ணத்தில்
எனது காமம்
பிறகு எனது செய்கை
பிரியங்களின்மேல் தன்னிச்சையாவும்
அடிப்படைகளின் மேல்
கூடுதலுக்கு என துல்லியமடையும்போது
நீ தவறவிட்ட அல்லது விதைத்தவை
அறுவடைக்குத் தயாராகிவிடுகின்றன
மாலையோ இளம் பொன்நிறத்திற்கு.

Comments are closed.