காரணமும் காரியமுமாய்
ஊர் சொல்லும் கதை கேட்டு
சிறுவயதில் யார் சொன்னாலும் கேட்கும்
பழக்கம் வந்தது
சொன்னபடி கேட்டுப் பழக
தாத்தா நொந்த விவசாயிகளின் கதை சொன்னார்
அப்பா அரசாங்கமும் சமூகமும்
ஒத்து வாழும் தத்துவங்கள் தந்தார்
பாட்டி மூதாதைகள் பற்றியும் முக்காலங்கள்
பற்றியும் உபதேசித்தார்
அம்மா தாவரங்களும் பிள்ளைகளும்
எப்படிப் பிறக்கின்றன என பகிர்ந்தாள்
இன்னும் சிலர் வாகனத்தில் இடதுபுறம் போகவும்
வேறுசிலர் கோடை கால தகவமைப்புகளையும்
கற்றுத்தர வானமும் கடலும்
கவிதைகள் பற்றி கற்பித்தன
காரணமும் காரியமும்
குளமும் மீனுமாய் இருப்பதைக் கண்டேன்
அத்தி பழுத்த மரத்தில் ஆயிரம் இரைச்சல்
புத்தி முதிர்ந்த இடத்தில் புரிதல் இல்லா மௌனம்
Comments are closed.