இன்னும் உனக்குத் தெரிவிக்கவில்லை
என் சிறிய கள்ளின் தந்திகளில்
உதறிக்கொண்டிருக்கும் சுருக்கமான செய்தியை
எப்போதும் உன் ஊரில்
மழை பெய்கிறதோ என்ன
என் கனவில்
முகம் நனைந்து உதடுகளில்
வழியும் துளிகளோடு உன்முகம்
கடல் பற்றிய புத்தகத்தில் நேற்று
பவளப் பாறைகளைப் படித்தேன்
நம் தனிமையின் ஒரு அறையில்
நீ எனக்குப் பயிற்றுவித்ததும் அதுதான்
ஆனாலும் எனது பயண வீதிகள்
உன் அருகாமையற்று நீளும்போது
உருத்திரளும் மஞ்சு போல
உன்னுருவம் சாலையைக் கடக்கும் வேளை
காதலின் பழம் பாடல் ஒன்றில்
கவிந்திருக்கும் என் மோனம்
பிறிதொரு சமயம்
இடமாற்றம் கேட்டு என் முன்
நிற்கும் சிப்பந்தியிடம் சொல்கிறேன்
உன்னை இழப்பது எவ்வளவு துக்ககரமானது
என் சிறிய கள்ளின் தந்திகளில்
உதறிக்கொண்டிருக்கும் சுருக்கமான செய்தியை
எப்போதும் உன் ஊரில்
மழை பெய்கிறதோ என்ன
என் கனவில்
முகம் நனைந்து உதடுகளில்
வழியும் துளிகளோடு உன்முகம்
கடல் பற்றிய புத்தகத்தில் நேற்று
பவளப் பாறைகளைப் படித்தேன்
நம் தனிமையின் ஒரு அறையில்
நீ எனக்குப் பயிற்றுவித்ததும் அதுதான்
ஆனாலும் எனது பயண வீதிகள்
உன் அருகாமையற்று நீளும்போது
உருத்திரளும் மஞ்சு போல
உன்னுருவம் சாலையைக் கடக்கும் வேளை
காதலின் பழம் பாடல் ஒன்றில்
கவிந்திருக்கும் என் மோனம்
பிறிதொரு சமயம்
இடமாற்றம் கேட்டு என் முன்
நிற்கும் சிப்பந்தியிடம் சொல்கிறேன்
உன்னை இழப்பது எவ்வளவு துக்ககரமானது

Comments are closed.