காண்பொருள் எனக்குள்ளே
ஒரு கையளக்கும் உருவம்
தோற்றமே பிழையா
பாம்பா கயிறா
ஆதி பயமா செய்வினைக் குழப்பமா
பாம்பென்றால் லெளகீகம்
கயிறென்றால் பிறவி
உருண்ட கல் உருளும் கல்
திரண்ட மேகம் தீஸ்சூரியன்
மழை பொழிகிறது
பருவத்திற்கு ஒரு பார்வை
பார்வையின் அலகு தூரம் மொழி
மொழி விரிக்கும் தோற்றம் பிழை
எந்தப் பெயரில் என்ன இருக்கிறது
கண் இருக்கிறது
எல்லாவற்றின் மீதும் ஒரு கண்
கண்ணென்றால் இருவர்
இவன் அவன் அது இது அவள் இவள்
மனத்திற்கண் தோற்றம்
மனம்போன போக்கு
மனமாரச் செய்தல்
மனமறியாப் பாவம்
மறைபொருள் காண் அறிவு
எக்காலமும் புலி நிலத்துக் கரும் பாறைகள்
சலித்துக் கொள்வதில்லை
மொழி அறிந்தவன் எதையும்
படித்துக் கூறுவதில்லை

Comments are closed.