எனது வீடுகள் நடமாடிக்கொண்டிருக்கின்றன அதன் முகவரியை ஒரு குன்றினைப் போல் என்னால் பிடித்துவைக்க முடியவில்லை
அகாலத்தில் இசைத்துக்கொண்டிருக்கும் உடைந்த நிலவின் நகக் கண்களில் இருந்து உனக்கான ஒரு பாடலை உருவாக்குகிறேன்
நீரோடைகளின் அருகே சிறு புல்லென நிலவின் அருகாமையில் நட்சத்திரங்களென ஒளிரும் மலைமுகப்பில் உலவும் மேகமென...