இன்னும் நிச்சயிக்கப் படவில்லை
ஒரு மரம் முறியும் சப்தம்
காதலின் நடுவழியில்
நான் மறந்துவிட்ட வாக்குறுதிகள்
அகன்ற விழிகளுக்குள்
எனது சொல் புகுந்த கலக்கம்
மறுபடியும் நாணற் புல் கிழித்து
இருவரும் கண்ட சங்கேதங்கள்
பகல் தின்கிறது
விரல் முனைகளில் துளிர்க்கும் காமத்தை
இரவாய் இருப்பது
ஒரு விடியலைச் சபிப்பது
இருக்காது என்றவள் திரும்புகிறாள்
ஆற்றின் கரையில் இருவருக்கும்
சமதூரத்தில் படகு மிதக்கிறது
வாக்குறுதிகளை அசைபோடலாம்
சம்மதமெனில்
எதிர்த் திசையில் ஓடவேண்டும் ஆறு
இல்லையெனில்
இருவருக்குமிடையே எதற்கு ஒரு படகு
ஒரு மரம் முறியும் சப்தம்
காதலின் நடுவழியில்
நான் மறந்துவிட்ட வாக்குறுதிகள்
அகன்ற விழிகளுக்குள்
எனது சொல் புகுந்த கலக்கம்
மறுபடியும் நாணற் புல் கிழித்து
இருவரும் கண்ட சங்கேதங்கள்
பகல் தின்கிறது
விரல் முனைகளில் துளிர்க்கும் காமத்தை
இரவாய் இருப்பது
ஒரு விடியலைச் சபிப்பது
இருக்காது என்றவள் திரும்புகிறாள்
ஆற்றின் கரையில் இருவருக்கும்
சமதூரத்தில் படகு மிதக்கிறது
வாக்குறுதிகளை அசைபோடலாம்
சம்மதமெனில்
எதிர்த் திசையில் ஓடவேண்டும் ஆறு
இல்லையெனில்
இருவருக்குமிடையே எதற்கு ஒரு படகு

Comments are closed.