பசியாறட்டும் என
விரல்களை நீரில் ஆழ்த்தினேன்
நேரம் தாழ்ந்த என் விரல்களில்
நட்சத்திரங்களைத் தீட்டியிருந்தன வண்ண மீன்கள்
பிரபஞ்சத்தின் அல்லது பால்வெளிகளில்
ஒரு நாவற்பழத்தின் நிறத்தை மறைப்பது யார்
மேலும் பழத் துண்டுகளை பாலில்
ஊறவைத்த ஈச்சம் பழங்களை
காலம் என் கைகளில் வழங்கும்
யாவும் நிறமற்றுப்போன
பசியின் பாதை மறந்துவிட்ட
நான் அல்லது மீன்
நகமற்ற எனது விரல்கள்
மேலும் கடலின் ஒரு சிறிய சம்பவம்
விரல்களை நீரில் ஆழ்த்தினேன்
நேரம் தாழ்ந்த என் விரல்களில்
நட்சத்திரங்களைத் தீட்டியிருந்தன வண்ண மீன்கள்
பிரபஞ்சத்தின் அல்லது பால்வெளிகளில்
ஒரு நாவற்பழத்தின் நிறத்தை மறைப்பது யார்
மேலும் பழத் துண்டுகளை பாலில்
ஊறவைத்த ஈச்சம் பழங்களை
காலம் என் கைகளில் வழங்கும்
யாவும் நிறமற்றுப்போன
பசியின் பாதை மறந்துவிட்ட
நான் அல்லது மீன்
நகமற்ற எனது விரல்கள்
மேலும் கடலின் ஒரு சிறிய சம்பவம்

Comments are closed.