Mr. Devendhira Poopathy

Mr. Devendhira Poopathy

He is a well established Tamil poet/writer who has reached this level pursuing his passion towards Tamil Literature and interest to explore new places. He is also the Joint Commissioner of Commercial Taxes, Tamil Nadu.

Follow Kadavu

நீராகாரத்தோடு கூடிய பழைய நாட்கள் மழையின் சிறு தானியங்களின் வாசம்...

— நடுக்கடல் மௌனம் | நடுக்கடல் மௌனம்

நடுக்கடல் மௌனம்

நீராகாரத்தோடு கூடிய பழைய நாட்கள்
மழையின் சிறு தானியங்களின் வாசம்
தாய் தந்தையரின் மணம் பரப்பும் வீட்டறைகள்
உறியில் இருந்து இறங்கி
நான் வாசித்தப் பாடல்கள்
லட்சியத்தின் தொலைதூர விளைநிலங்கள்
கடவுளிடம் ஏற்பட்ட நல்லெண்ணக் கூட்டு
நட்புடன் கொண்ட பருவ விளையாட்டுகள்
எனது மேய்ச்சல் நிலத்தின் விஸ்தீரணம்
கவிதை கண்ட தருணங்களோடு
மயக்கப்பட்ட தேவதைகளின் யதார்த்தம்
இன்ன பிற காரியார்த்தங்களில்
மீந்திருக்கும் நிகழ் தகவுகளை
பிறவிப் பெருங்கடலில் உந்திச் செல்கிறேன்
அன்பிற்கும் நிரூபணங்களுக்கும் இடையே சூறாவளி
அல்லது நடுக்கடல் மௌனம்
தலைகீழாக நான் நடந்தால் என் காதுகளுக்கு செய்தி சொல்ல
நீங்கள் எவ்வளவு குனிய முடியும்
இதனால் தான் எல்லாத் தீர்மானங்களும்
ஆளுயரத்தில் இருக்கின்றன
காலில் கொத்தும் பாம்பின் மட்டம் ஏன்
கண்களுக்குத் தெரிவதில்லை
கழுகின் கண்ணில் தெரியும் பாம்புகளின்
உறைவிடம் தான் மனிதமை அற்ற
ஏழாவது உலகம்.
deep-sea

Written by Admin

Comments are closed.