பலிக்கும் கனவுகளுக்கென ஒரு முகம்
அதன் நாவினில் நானொரு இலை
நதியின் கரைகளில் ஓர் இல்லம்
அதன் படித்துறையில் ஒரு தவளை
சிரிக்கும் விசித்திரம் எனது சினேகிதி
அவளது ஞாபக மறதியில் ஒரு விடுதலை
பிறப்பிலிருந்தே கிடைக்கும் அறிக்கைகள்
அதிலிருந்து எனக்குமட்டுமான ஒரு செய்தி
எந்தக் காதலுக்காக இறக்கிவிடப்பட்டது
எனது நடமாட்டம்
ஒருமுறைதான் நீச்சல் பழகியதும்
ஆற்றில் அறிந்து கொண்டதும்
சுழலும் காதலுடன் இலைமேல்
தவளையாக
எனது இருப்பு
அதன் நாவினில் நானொரு இலை
நதியின் கரைகளில் ஓர் இல்லம்
அதன் படித்துறையில் ஒரு தவளை
சிரிக்கும் விசித்திரம் எனது சினேகிதி
அவளது ஞாபக மறதியில் ஒரு விடுதலை
பிறப்பிலிருந்தே கிடைக்கும் அறிக்கைகள்
அதிலிருந்து எனக்குமட்டுமான ஒரு செய்தி
எந்தக் காதலுக்காக இறக்கிவிடப்பட்டது
எனது நடமாட்டம்
ஒருமுறைதான் நீச்சல் பழகியதும்
ஆற்றில் அறிந்து கொண்டதும்
சுழலும் காதலுடன் இலைமேல்
தவளையாக
எனது இருப்பு

Comments are closed.