காலம்
ஆதாரங்களின்
மெல்லிய தோல் விரிந்து விட்ட
விதையொன்றைக் கொண்டுள்ளது
பருவ காலங்களின் இரகசியத்தை
விதையிலைகளின்
கருகிய முனைகளில் இருந்து
அறிந்துகொள்பவரை
அல்லது
நிலத்தின்
விழுங்கி வெடிக்கும் அனுபவத்தை
மேலானவர்களுக்குச் சொல்லும்
புனிதரை
மேலும்
அவர் மறந்துவிட்ட
பாதையை கண்டேன் என
எப்படிச் சொல்ல
காலத்தைச் சொல்லும் வழக்கம்
காலத்தில் தான் தொடங்குகிறது.

Comments are closed.