விழுவதும் உன்னதம்தான்
என்றார்கள்
மழையைக் காட்டி
பிறகு
மரத்தின் உச்சியைக் காட்டி
உயரச்செல்வதுதான் மேன்மை என்றார்கள்
ஒரு மழைநாளில்
தரை விழுந்து சிதறின நீர்த்துளிகள்
கொட்டியது போக
கிளை உடைந்த மரத்தின் உச்சியில்
சில இளைப்பாறிக் கிடந்தன
விழுந்து தரை சிதறவும்
எழுந்து மேன்மையடையவும்
வார்த்தைகளைப் பழக்கும் நாக்கு
எதையும் தின்ற வழியே புறந்தள்ளும் ஒரு மண்புழு
வெட்டவெட்ட முழுமையடைந்து
தமக்கான வெளியை எடுத்துக்கொள்ளவே
நீண்டுவிடுகின்றன
மண்புழுக்கள்.
என்றார்கள்
மழையைக் காட்டி
பிறகு
மரத்தின் உச்சியைக் காட்டி
உயரச்செல்வதுதான் மேன்மை என்றார்கள்
ஒரு மழைநாளில்
தரை விழுந்து சிதறின நீர்த்துளிகள்
கொட்டியது போக
கிளை உடைந்த மரத்தின் உச்சியில்
சில இளைப்பாறிக் கிடந்தன
விழுந்து தரை சிதறவும்
எழுந்து மேன்மையடையவும்
வார்த்தைகளைப் பழக்கும் நாக்கு
எதையும் தின்ற வழியே புறந்தள்ளும் ஒரு மண்புழு
வெட்டவெட்ட முழுமையடைந்து
தமக்கான வெளியை எடுத்துக்கொள்ளவே
நீண்டுவிடுகின்றன
மண்புழுக்கள்.

Comments are closed.