கயிற்றில் கட்டிய பசு
வட்டமாய் புல் மேய்கிறது
பிறகு வட்டத்திற்குள் அமர்ந்து அசை போடுகிறது
வட்டப்புல் மேய்ந்த பசு
வட்டத்திற்கு வெளியே பசி மறந்தது
கயிற்றின் தீர்மானமான பரப்பு
அதன் மையம் விலகாத தன்மை
புற்களின் எளிமை அதன் வட்டம்
பிறகு மாட்டின் வால் வரைந்த வட்டம்
அதன் கண்களில் அகப்பட்ட வட்டம்
மாடு வெளி நோக்கி அவிழ்த்துக் கொண்டது
மையமும் அதன் கயிறும் கிடக்கிறது
இடையே ஒரு வாழ்வு அல்லது ஒரு பசி
அல்லது ஒரு கழிவு அல்லது ஒரு உற்பத்தி
அல்லது ஒரு விலங்கு
செயல் மையமாகும் போது
எல்லாம் நடக்கிறது
வெளியை மாடு கடக்கிறது

Comments are closed.