நீரால் ஆனது
வெப்பத்தால் சுருங்கியும் விரிந்தும்
சலனமடைகின்றன
நீரால் ஆனவை
ஒன்றுடன் ஒன்று தடவி தம்மை
அறிந்து கொள்கின்றன.
நீரால் ஆனவை அடக்கமின்மையின்
கூச்சலை கரையில் எதிரொலிக்கின்றன
நீரால் ஆனவை
காதலை ஆழ்கடல் சுரங்கத்தினுள்
குருட்டு விலங்காய் தனித்துக் கொள்பவை
நீரால் ஆனவைதான்
நிலத்தில் நாலுவீசம் பேணுகின்றன
இறுதியில் நீரால் ஆனவை
மண்பெட்டியில் வற்றி உலர்கின்றன
நீரால் ஆன எல்லாம் நீராய்ப் போய்விடுகின்றன
ஆதியில் மக்கள் சொல்வார்கள்
நீர் அடித்து நீர் விலகுவதில்லை
கூர் பிடித்த ஆயுதத்திற்கு கொலைதான் எல்லை

Comments are closed.