நான் சொல்லும்போது
நீ நம்புவதுபோல முகம் காட்டும்
பின்னணியில் என்ன இருக்கிறது
தெரியவேண்டும்
நீ நம்புவதற்குரிய சொற்களை
எப்படி நான் தேர்ந்தெடுக்கிறேன்
என்பதும் அறிய வேண்டிய பின்னணிதான்
மீண்டும் சில சொற்களூக்காக
நீ என்னிடம் வருவதும்
கொண்டுவந்த சொற்களை
என்னிடம் விட்டுப்போவதும்
நான் நீ அல்ல நீ நானுமல்ல
பின்னால் முகம் மாற்றும்
செயல் மட்டும்தான்
இருவருக்கும் இயல்பானது
இத்தகைய செயல் நமக்கு
முன்னும் பின்னுமாய்
யுகங்களாய்த் தொடர்கிறது
சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ
எனத் திகையாதே
சொல்லற மிஞ்சும்
நீயும் நானும்
நீ நம்புவதுபோல முகம் காட்டும்
பின்னணியில் என்ன இருக்கிறது
தெரியவேண்டும்
நீ நம்புவதற்குரிய சொற்களை
எப்படி நான் தேர்ந்தெடுக்கிறேன்
என்பதும் அறிய வேண்டிய பின்னணிதான்
மீண்டும் சில சொற்களூக்காக
நீ என்னிடம் வருவதும்
கொண்டுவந்த சொற்களை
என்னிடம் விட்டுப்போவதும்
நான் நீ அல்ல நீ நானுமல்ல
பின்னால் முகம் மாற்றும்
செயல் மட்டும்தான்
இருவருக்கும் இயல்பானது
இத்தகைய செயல் நமக்கு
முன்னும் பின்னுமாய்
யுகங்களாய்த் தொடர்கிறது
சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ
எனத் திகையாதே
சொல்லற மிஞ்சும்
நீயும் நானும்

Comments are closed.