இப்போதெல்லாம்
காதலை ஒழித்துக் கட்டுவது பற்றி
ஆலோசிக்கிறேன் இடையில்
தாமரையை புனைப்பெயராகக் கொண்ட
ஒருத்தி குறுக்கிடுகிறாள்
ஆண்களைக் காதலிப்பது மகா பாவம்
என அவள் ஒருமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன்
அவள் தன் கணவனை விட்டு காதலுடன்
ஓடிப்போன சமயம்
எனக்கது ஒரு தகவலாகவும் சற்றே இரக்கமாகவும் இருந்தது
என் அலுவலகக் கோப்புகளில் தொடர்ந்து
விரல்கள் நொகும் வரை
கையெழுத்திட்டுக்கொண்டே இருக்கிறேன்
தாமரை ஆரம்பத்தில் என்னைத்தான்
காதலித்தாள் எனச் சொல்வது
இப்போதைக்குப் பொருத்தமானது
அவமானங்களின் நிகழ் வெளியில்
எத்தனை காலம் மறைந்தழிந்தாளோ
எந்த பரிதாபத்தின் விழுப்பல் பட்டதோ
இடையில் அவன் இறந்தும் போய்விட்டான்
இதைத் துக்கமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை
தகவலாகவும்தான்
தாமரை என்பது ஒரு பெண்ணின் புனைப் பெயர் என்பதும்
அது காதலுக்குரியது என்றும்
நான் வைத்திருந்த புனைவு ஒன்று கூடவே
இறந்துவிட்டதால்
எனது நிஜப்பெயறை வைத்துத்தான்
இக் கவிதையை நான் எழுத வேண்டும்
துரதிர்ஷ்டம்.
காதலை ஒழித்துக் கட்டுவது பற்றி
ஆலோசிக்கிறேன் இடையில்
தாமரையை புனைப்பெயராகக் கொண்ட
ஒருத்தி குறுக்கிடுகிறாள்
ஆண்களைக் காதலிப்பது மகா பாவம்
என அவள் ஒருமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன்
அவள் தன் கணவனை விட்டு காதலுடன்
ஓடிப்போன சமயம்
எனக்கது ஒரு தகவலாகவும் சற்றே இரக்கமாகவும் இருந்தது
என் அலுவலகக் கோப்புகளில் தொடர்ந்து
விரல்கள் நொகும் வரை
கையெழுத்திட்டுக்கொண்டே இருக்கிறேன்
தாமரை ஆரம்பத்தில் என்னைத்தான்
காதலித்தாள் எனச் சொல்வது
இப்போதைக்குப் பொருத்தமானது
அவமானங்களின் நிகழ் வெளியில்
எத்தனை காலம் மறைந்தழிந்தாளோ
எந்த பரிதாபத்தின் விழுப்பல் பட்டதோ
இடையில் அவன் இறந்தும் போய்விட்டான்
இதைத் துக்கமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை
தகவலாகவும்தான்
தாமரை என்பது ஒரு பெண்ணின் புனைப் பெயர் என்பதும்
அது காதலுக்குரியது என்றும்
நான் வைத்திருந்த புனைவு ஒன்று கூடவே
இறந்துவிட்டதால்
எனது நிஜப்பெயறை வைத்துத்தான்
இக் கவிதையை நான் எழுத வேண்டும்
துரதிர்ஷ்டம்.

Comments are closed.