அந்தியின் வார்த்தையிலிருந்து
உனக்கொரு செய்தி
நட்சத்திரங்கள் உதிக்கும் முன்பு
உனது புன்னகையின் இருள்வீதீ முடிவடையலாம்
நான் அதன் மருமுனையில்
ஒளி ஏற்றுவேன்
காலத்தின் தடங்களை பெரும் சாலையில்
பதித்துப் போனவர்களை விட்டுவிட்டேன்
ஒரு மரம் தனது
மலர்களை அறிவிக்கிறது
நீ இன்னும் சாலைக்கு வரவில்லை
இன்று மழை வரலாம்
நான் வெளிவராத நாளில்
ஒரு யுகம் கடந்து நிலம்
கடந்து வந்திருக்கும் சமீபத்திய
செய்தியில் எனது பெயர் இருக்காது
மன்னித்து விடு
பூத்திருக்கும் மரங்களை இம் மாலையில்
கடந்து செல்கிறேன்.
உனக்கொரு செய்தி
நட்சத்திரங்கள் உதிக்கும் முன்பு
உனது புன்னகையின் இருள்வீதீ முடிவடையலாம்
நான் அதன் மருமுனையில்
ஒளி ஏற்றுவேன்
காலத்தின் தடங்களை பெரும் சாலையில்
பதித்துப் போனவர்களை விட்டுவிட்டேன்
ஒரு மரம் தனது
மலர்களை அறிவிக்கிறது
நீ இன்னும் சாலைக்கு வரவில்லை
இன்று மழை வரலாம்
நான் வெளிவராத நாளில்
ஒரு யுகம் கடந்து நிலம்
கடந்து வந்திருக்கும் சமீபத்திய
செய்தியில் எனது பெயர் இருக்காது
மன்னித்து விடு
பூத்திருக்கும் மரங்களை இம் மாலையில்
கடந்து செல்கிறேன்.
