பதினாறாம் ராவிலே பாலாழிக்கடலிலே
மல்ஸ்யக் கன்னிகமாருடே மாணிக்கப் பொன்னுகொண்டுதராமோ-
வள்ளமும்
அலையும் நதியோரப் பசுமையும்
நிழலாடும் பாடல் ஒன்று
எளிதாய்க் கடந்து வந்த
நிலத்தின் நினையாய்
பால்யத்தைத் தாலாட்டுகிறது
தகழியின் காதல் நிலம்
விரித்த கதைகள்
நானிந்தத் தமிழ் நிலத்தின்
இருமையில் கோவலன் நீங்கிய
பத்தினிக் கோட்டம் பயின்று
உழல்கிறேன்
கதை சொல்லிகள் கவிஞர்களுடன் – பிறகு
என் வரலாறு எங்கே பொருந்துகிறது
நான் எந்த இனக்குழு
எந்த அரசியல் பேசுவது
யாரோடு இணைவது
சீத்தலைச் சாத்தனார் எனக்கு என்ன உறவுமுறை
வள்ளத்தோள் எழுத்தச்சன்
வள்ளுவர் தொல்காப்பியன்
எந்த வகுப்பு நான்
எனது பிள்ளைக் காலம் போயிற்று
எனது பிள்ளையின் காலத்தில்
ஒரு தந்தையை அவன்
எங்ஙனம்
சொல்லிக்காட்டுவான்

Comments are closed.